அர்த்தநாரிசுவரர் தத்துவம்
மனிதன் அறியாத தத்துவங்களை ஆலயத்தின் வழி ஆக்கி அருளி வைத்தனர்.மனிதனுக்கு புலப்படாத பொருளையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றலையும் ஆலயத்தின் வழியாக அறிவியலை ஆக்கி அருளி வைத்தனர்.
மனித உடலிலுள்ள வேதியல் முறைகளை தெய்வத்தின் வழியாக அறிவதற்கு எடுத்துக் காட்டாக அர்த்தநாரிஸ்வரரை அமைத்தனர். அர்த்தநாரிஸ்வர் வடிவில் இரத்த ஒட்டத்தின் செயல்பாட்டினை தெளிவாக அறிவதற்கு சக்தியை சிவப்பாகவும் சிவபெருமானை நீலநிறமாகவும் காட்சியின் வழியாக உயர்வளி கொண்ட இரத்ததை சிவப்பாகவும் உயிர்வளி இல்லா இரத்தத்தை நீலநிறமாகவும் ஒரே சீராகவும் சமநிகர் சமமாகவும் செயல்படுத்தினர்.
![]() |
உயிர்வளி பெற்ற இரத்தம் சக்தியாகவும் உயிர்வளி இழந்த இரத்தம் நீலநிறமாகவும் மீண்டும் நீலநிறமாகிய சிவனீயம் சக்தியாகவும் சிவப்பாகிய சக்தி சிவனீயமாக (நீலநிறம்) மாறிமாறி செயல்படுவதால் சக்தியில்லையேல் சிவனில்லை சிவனில்லையேல் சக்தியில்லை.
