Saturday, 20 August 2011

இந்து குடும்பம் கூட்டுக் குடும்பம்



இந்து குடும்பம் கூட்டுக் குடும்பம்

இந்து சமய தத்துவங்களை செயல்முறை படுத்தினால் அது கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்திக் காட்டும். கூட்டுக் குடும்பம் என்பது ஒற்றுமையுடன் வாழ்வது, உடன்பிறப்புடன் ஒன்று சேர்ந்து வாழ்வது, நம் உறவுமுறை குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்துக்கொள்வது இவை எல்லாம் இந்து சமய குடும்ப வாழ்வியல் தத்துவங்கள்.

இந்து சமய குடும்பத்தினர் கையேந்தும் சமுதாயமாக இல்லை என்பதற்கு மேற் கூறியவை சான்று. குடும்பத்தில் உடன்பிறப்பில் ஒருவர் நம்மிடையே இல்லாவிட்டால் அல்லது காலமாகி விட்டால் அவரின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாகக் கருதி அவர்களுக்கும் செய்ய வேண்டிய பணியை இருக்கக் கூடிய உடன்பிறப்புகள் நிறைவு செய்வார்கள். மேலும், குழந்தை பேறு இல்லாத உடன்பிறப்புகள் தன் உடன்பிறப்பு குழந்தைகளைத் தன் குழந்தையாக ஏற்று தன் பிள்ளைகளைப் போல் வளர்பது வழக்கம். அல்லது அதிக மக்கட் பேறு பெற்ற உடன்பிறப்புகள் தன் குழந்தைகளில் ஒருவரை தன் உடன்பிறப்புக்கு தத்துகொடுப்பதும் உண்டு.

இந்து குடும்பதில் பொதுநலம்.


சிறுவர் நலம்

இந்து சமுதாயத்தில் சிறுவர் இல்லம் கிடையாது. இந்துக்கள் பொருளாதார சுமையின் பொருட்டு அல்லது குடும்ப சூழ்நிலைப் பொருட்டு  தன் குழந்தைகளைச் சிறுவர் இல்லங்களுக்கோ அல்லது தன் உடன்பிறப்பு அல்லாத அன்னியர்களுக்கோ கவனித்துக் (பராமரிப்பு) கொள்ள கொடுப்பதில்லை. மாறாக இந்து சமய வாழ்வியல் தத்துவங்களை அறியும் பொருட்டு குருக்குலம் என்று சொல்லலப்படும் பாடசாலைக்கு அனுப்புவது உண்டு. இதில் எல்லா தரப்பினரும் கல்விப் பெற வாய்ப்புண்டு.
இதுவே சிறுவர் நலம்.

முதியோர் நலம்

இந்து சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்கள் நலன் கருதி அவர்களின் இயலாத காலத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அரவணைப்பதும் பராமரிப்பதும் தன் கடமையாக கொண்டுள்ளதால் முதியோர்களுக்கு தன் குடும்பமே முதியோர் நலம்.


இந்து குடும்பத்தின் சுயமதிப்பு.

இந்துக்கள், இல்லாத இயலாத காலத்தில் அல்லது நேரத்தில் சுய மதிப்போடு வாழ்ந்து காட்டியவர்கள். பிறரிடம் சுயமதிப்புடன் வாழ்ந்து காட்டும் தன்மையுடனும் குடும்ப நலன் காக்கும் தன்மையுடனும் பொருட்டு இவர்கள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவு முறையில் உள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி குடும்பத்தின் சுயமதிப்பை காத்தனர்....... தொடரும் .....

Monday, 15 August 2011

மத மாற்றத்தால் மக்கள் தொகை பாதிப்பு

மத மாற்றத்தால் மக்கள் தொகை பாதிப்பு

மத மாற்றத்தால் இந்து மக்கள் தொகை இழப்பும் இதனால் சிறுபான்மை இனமாக கருதப்பட்டு ஒதுகீட்டில் இழப்பும் ஏற்படுகிறது. எல்லாத்துறைகளிலும் பிரதிநிதித்துவ அபாயமும் ஏற்படுகிறது. மிகக் குறைவான எண்ணிக்கையில் இனமோ அல்லது மதமோ இருந்தால் அதைச்சார்ந்த பிரதிநிதித்துவத்திற்குக் கொடுக்கும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.

அரசாங்கம் அல்லது தனியார் துறைகளில் பொது நிகழ்ச்சியான கலைக் கலாச்சாரம் போன்றவை ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிட்டாலும் சிறுபான்மையினராக அல்லது எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பின் வாய்பில்லாமல் போய்விடும்.

தேர்தல்:- நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தால் தொகுதியில் வெற்றியை அடிப்படையாக நிலைநிறுத்தும் உரிமை ஓரளவு விகிதாச்சாரப்படி அதிக பட்சமாக இருக்கும் இனமோ அல்லது மதமோ இருந்தால் முதலுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப் படுகிறது.

ஆலயம்:- இந்துக்கள் மதம் மாறினால் விகிதாச்சாரம் குறைந்து வழிபாட்டு தலங்கள் செயலிழந்து, பக்தர்கள் குறைந்து, சமய விழா பாதிப்படைந்து தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும்  சமய விழா ஊர்வலம் அரிச்சுவடு இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. பிறகு ஆலயங்கள் வருங் காலத்தில் சுற்றுப் பயணிகள் கவரும் காட்சிக் கூடமாகவும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் இந்து சமயத்தை வழிபட்டவர்கள் மாற்று சமயத்திற்கு சென்று விட்டதால் யாரும் வழிபட ஆளில்லை. ஆகவே, ஆலயம் நினைவகமாக ஆக்கப் பட்டது என்று கூறுங் காலம் வெகுதொலைவில் இல்லை.

தமிழ் பள்ளி:- இந்துக்கள் பெரும் பான்மையினர் மொழிப் பற்றின் குறிக்கோளோடு தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். மேலும், அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்ற பொது இயக்கங்களின் பொறுப் பாளர்கள் அனைவரும் பிள்ளைகளைத் தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பதும் பரப்புரை செய்வதுமாக இருக்கிறார்கள். இந்நிலையில் மக்கள் தொகை இழப்பு ஏற்படும் போது தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் விகிதாச்சாரம் குறைந்து காணப்படும் போது இந்நாட்டில் தமிழ்ப் பள்ளி நிலைத் தடுமாற வாய்ப்பிருக்கிறது.

Saturday, 6 August 2011

மத மாற்றத்தால் பொருளாதாரம் பாதிப்பு

மத மாற்றத்தினால் பொருளாதாரம் பாதிப்பு.

ஓர் இந்து அன்றாட இறைவழிபாட்டில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5.00 வெள்ளி செலவிடுகின்றார். மேலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூடுதலாக 5.00 வெள்ளி செலவிடுகின்றார்.
இதுபோக ஒவ்வொரு சனிக்கிழமை சனிசுவரனுக்காக 5.00 வெள்ளி செலவிடுகின்றனர். ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கான வழிபாட்டு பொருட்களின் செலவினங்கள் துல்லியதமாக கணக்கிட்டால்:-
தினசரி 5.00 வெள்ளி வீதம் மாதம் ஒன்றுக்கு             150.00
வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மாதம் நான்கு முறை 20.00
வாரம் ஒரு முறை சனிக்கிழமை மாதத்தில் நான்கு முறை 20.00                   ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கு   190.00                                                ஓர் ஆண்டிற்கு                  2280.00                                                                                                பத்தாண்டிற்கு                  22800.00                 அய்ம்பது ஆண்டிற்கு           114000.00 
ஒருவரின் வாழ்நாள் எண்பது (80) வயது என்றாலும் 50பது ஆண்டுகளுக்கு இறைவழிபாட்டிற்கு செலவிடும் தொகை 114000.00 இருக்கிறது.

இதன் பொருட்டு தினமும் வழிபாட்டு பொருட்களான சூடம், சாம்பிடாணி, ஊதுபத்தி, எண்ணெய், திரி, கும்குமம் சந்தனம், திருநீறு போன்றவை தயாரிக்கும் பல நிறுவனங்கள் பாதிப்பும் வேலையிழப்பும் ஏற்படுகின்றன.

மேலும் வெற்றிலை பாக்கு, பழவகைகள், பூ வியாபாரம் பாதிக்கப் படுவதால் இதை நம்பி வாழும் விவசாயிகள், வியாபாரிகள் வருமானமும் பாதிக்கப் படுகின்றன. ஓர் இந்து மதம் மாறினால் எத்தனை துறை பாதிக்கப் படுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் எண்ணிப் பார்க்க வேண்டும். இது இந்து சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.