மத மாற்றத்தினால் பொருளாதாரம் பாதிப்பு.
ஓர் இந்து அன்றாட இறைவழிபாட்டில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5.00 வெள்ளி செலவிடுகின்றார். மேலும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கூடுதலாக 5.00 வெள்ளி செலவிடுகின்றார்.
இதுபோக ஒவ்வொரு சனிக்கிழமை சனிசுவரனுக்காக 5.00 வெள்ளி செலவிடுகின்றனர். ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கான வழிபாட்டு பொருட்களின் செலவினங்கள் துல்லியதமாக கணக்கிட்டால்:-
தினசரி 5.00 வெள்ளி வீதம் மாதம் ஒன்றுக்கு 150.00
வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மாதம் நான்கு முறை 20.00
வாரம் ஒரு முறை சனிக்கிழமை மாதத்தில் நான்கு முறை 20.00 ஆக மொத்தம் ஒரு மாதத்திற்கு 190.00 ஓர் ஆண்டிற்கு 2280.00 பத்தாண்டிற்கு 22800.00 அய்ம்பது ஆண்டிற்கு 114000.00
ஒருவரின் வாழ்நாள் எண்பது (80) வயது என்றாலும் 50பது ஆண்டுகளுக்கு இறைவழிபாட்டிற்கு செலவிடும் தொகை 114000.00 இருக்கிறது.
இதன் பொருட்டு தினமும் வழிபாட்டு பொருட்களான சூடம், சாம்பிடாணி, ஊதுபத்தி, எண்ணெய், திரி, கும்குமம் சந்தனம், திருநீறு போன்றவை தயாரிக்கும் பல நிறுவனங்கள் பாதிப்பும் வேலையிழப்பும் ஏற்படுகின்றன.
மேலும் வெற்றிலை பாக்கு, பழவகைகள், பூ வியாபாரம் பாதிக்கப் படுவதால் இதை நம்பி வாழும் விவசாயிகள், வியாபாரிகள் வருமானமும் பாதிக்கப் படுகின்றன. ஓர் இந்து மதம் மாறினால் எத்தனை துறை பாதிக்கப் படுகின்றன என்று ஒவ்வொரு இந்துவும் எண்ணிப் பார்க்க வேண்டும். இது இந்து சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
No comments:
Post a Comment