இந்து குடும்பம் கூட்டுக் குடும்பம்
இந்து சமய தத்துவங்களை செயல்முறை படுத்தினால் அது கூட்டுக் குடும்பத்தை வலியுறுத்திக் காட்டும். கூட்டுக் குடும்பம் என்பது ஒற்றுமையுடன் வாழ்வது, உடன்பிறப்புடன் ஒன்று சேர்ந்து வாழ்வது, நம் உறவுமுறை குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்துக்கொள்வது இவை எல்லாம் இந்து சமய குடும்ப வாழ்வியல் தத்துவங்கள்.
இந்து சமய குடும்பத்தினர் கையேந்தும் சமுதாயமாக இல்லை என்பதற்கு மேற் கூறியவை சான்று. குடும்பத்தில் உடன்பிறப்பில் ஒருவர் நம்மிடையே இல்லாவிட்டால் அல்லது காலமாகி விட்டால் அவரின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாகக் கருதி அவர்களுக்கும் செய்ய வேண்டிய பணியை இருக்கக் கூடிய உடன்பிறப்புகள் நிறைவு செய்வார்கள். மேலும், குழந்தை பேறு இல்லாத உடன்பிறப்புகள் தன் உடன்பிறப்பு குழந்தைகளைத் தன் குழந்தையாக ஏற்று தன் பிள்ளைகளைப் போல் வளர்பது வழக்கம். அல்லது அதிக மக்கட் பேறு பெற்ற உடன்பிறப்புகள் தன் குழந்தைகளில் ஒருவரை தன் உடன்பிறப்புக்கு தத்துகொடுப்பதும் உண்டு.
இந்து குடும்பதில் பொதுநலம்.
சிறுவர் நலம்
இந்து சமுதாயத்தில் சிறுவர் இல்லம் கிடையாது. இந்துக்கள் பொருளாதார சுமையின் பொருட்டு அல்லது குடும்ப சூழ்நிலைப் பொருட்டு தன் குழந்தைகளைச் சிறுவர் இல்லங்களுக்கோ அல்லது தன் உடன்பிறப்பு அல்லாத அன்னியர்களுக்கோ கவனித்துக் (பராமரிப்பு) கொள்ள கொடுப்பதில்லை. மாறாக இந்து சமய வாழ்வியல் தத்துவங்களை அறியும் பொருட்டு குருக்குலம் என்று சொல்லலப்படும் பாடசாலைக்கு அனுப்புவது உண்டு. இதில் எல்லா தரப்பினரும் கல்விப் பெற வாய்ப்புண்டு.
இதுவே சிறுவர் நலம்.
முதியோர் நலம்
இந்து சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்கள் நலன் கருதி அவர்களின் இயலாத காலத்தில் தன் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அரவணைப்பதும் பராமரிப்பதும் தன் கடமையாக கொண்டுள்ளதால் முதியோர்களுக்கு தன் குடும்பமே முதியோர் நலம்.
இந்து குடும்பத்தின் சுயமதிப்பு.
இந்துக்கள், இல்லாத இயலாத காலத்தில் அல்லது நேரத்தில் சுய மதிப்போடு வாழ்ந்து காட்டியவர்கள். பிறரிடம் சுயமதிப்புடன் வாழ்ந்து காட்டும் தன்மையுடனும் குடும்ப நலன் காக்கும் தன்மையுடனும் பொருட்டு இவர்கள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவு முறையில் உள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி குடும்பத்தின் சுயமதிப்பை காத்தனர்....... தொடரும் .....
No comments:
Post a Comment